* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Saturday, August 9, 2008

என் சிறகுகள்


-----------------------------------------------
பிரளயங்களின் நடுக்கங்களுடன்
என் சிறகுகள் விரிந்திருக்கக்கூடும்
இன்னும் ஈரம் சொட்டுகின்ற
மழைக்காயங்களுடன்
நனைந்தபடி இருக்கின்றன.

பறக்க எத்தனிக்கையில்
சொல்லியும் கேட்காத
தவிர்த்தாலும் விளங்காத
கட்டற்ற வேகத்தில்
முடிந்திருந்தது கலவி ஒன்று..

களவாடப்பட்ட நிர்வாணத்தில்
ஆக்கிரமிக்கப்பட்ட அணைப்பில்
அறையப்பட்ட நேசத்தில்
சிறகுகள் எம்பித்தணிகின்றன
முயற்சிகளின் சோர்வில்லாமல்.
--------------------------------------------
மாதுமை
---------------------------------

No comments: