புதிய மாதவி நான்
ஒற்றைச் சிலம்பு அணிந்திருக்கிறேன்
தாகித்த போதெல்லாம்
தவம் செய்கின்ற என் பெண்மையைத் தருவது
பின்னொரு காலத்தில்
ஊரை அழிப்பதற்கல்ல
கற்புக்கும் எனக்கும்
சம்மந்தமில்லையென கூறுபவர்களிடம் கூட
என் ஒற்றைச் சிலம்பு
கோபித்ததில்லை
உறைகளின் உபயத்தால்
மணிமேகலைகளும் பிறப்பதில்லை
இருந்தும் நொந்து போகின்றேன்
ஒவ்வொரு மாதவிடாயின் போதும்
காவிரி நதிக்கரை
பூம்புகார் பட்டினம்
கொஞ்சுகின்ற கோவலன்
எதுவும் என்னிடம் இல்லாத போதும்
புதிய மாதவி நான்
ஏனோ
ஒற்றைச் சிலம்பு அணிந்திருக்கிறேன்
-------------------------------------------
மாதுமை
------------------------------
No comments:
Post a Comment