By மாதுமை
இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தாள் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடைப்பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தாள் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கஅம்மா
அம்மாக்கள் மட்டும் ஒற்றுமையாய் இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க.
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தாள் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடைப்பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தாள் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கஅம்மா
அம்மாக்கள் மட்டும் ஒற்றுமையாய் இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க.
----------------------------------------------
5-12-2007
என் அன்பான மாது,
5-12-2007
என் அன்பான மாது,
உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன். இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஓரே கவலையாக இருக்கின்றது. உன்னைப் பார்க்க வேண்டும் போல் மனதில் ஓர் இனம் புரியாத ஆசை. நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். நாட்டு நிலைமையை யோசித்தால் அது வேறு கவலை. நீங்கள் எல்லாம் வந்து போகக் கூடிய நிலைமை எப்போ வரும் என்று ஏக்கம். உனது சுகத்திற்கும் சந்தோசமான எதிர்காலத்திற்கும் இறைவனை வேண்டும்
உனது அன்பான அம்மா.
-------------------------------------
2 comments:
கவிஞர் மாதுமை அவர்களுக்கு,
உங்கள் மின்னஞ்சலை அறியத்தர
இயலுமா?
உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்.
மற்றவை கடிதத்தில்...
மிக்க நன்றி,
குட்டி ரேவதி
kuttirevathi@gmail.com
ஈழத்து தமிழ் பெண் கவிஞர்கள் அவர்களது கவிதைகள் தரமுடியுமா...
Post a Comment